இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற காங்., உறுதி: கார்கே
11 வைகாசி 2024 சனி 12:44 | பார்வைகள் : 2050
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஜிடிபியில், இந்தியாவின் உற்பத்தியை 14% இருந்து 20 சதவீதமாக உயர்த்தி, இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளதாக அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 25 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது, நாட்டின் ஜிடிபியில் இந்தியாவின் உற்பத்தி பங்கு அதிகமாக இருக்கும். இதற்கு மாறாக கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தியானது 14 சதவீதமாக சுருங்கிவிட்டது.
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஜிடிபியில், உற்பத்தியை 14 ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி, இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. நாட்டின் நலனுக்காகவும், உலகத்தின் நலனுக்காக, உற்பத்தியின் மனிதவளமாக இந்தியாவை மாற்ற காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.