Paristamil Navigation Paristamil advert login

கேரள கோயில்களில் அரளி பூவிற்கு தடை: அரசு உத்தரவு

கேரள கோயில்களில் அரளி பூவிற்கு தடை: அரசு உத்தரவு

11 வைகாசி 2024 சனி 12:45 | பார்வைகள் : 1549


கேரள மாநிலத்தில் அரளிப்பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள கோயில்களில் அரளிப் பூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சூர்யா (23). நர்சிங் படித்துள்ளார். 

இவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து லண்டன் செல்வதற்காக அவர் தயாராகிக் கொண்டிருந்தார். செல்போனில் பேசிக்கொண்டிருந்த அவர், வீட்டின் முன்பு இருந்த அரளி செடியில் இருந்து ஒரு பூவை எடுத்து விளையாட்டு தனமாக வாயில் போட்டுள்ளார். 

அதன் பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பூஜையின்போதோ அல்லது சாமி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும்போதோ அரளி பூக்களை பயன்படுத்தக்கூடாது என அரசு தடை வித்தித்துள்ளது. அரளி பூக்களுக்கு பதிலாக துளசி, செம்பருத்தி பூக்களை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்