பூமியை தாக்கிய சக்தி வாய்ந்த சூரியப்புயல்...!
11 வைகாசி 2024 சனி 13:13 | பார்வைகள் : 4814
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூரியப்புயல் பூமியை தாக்கியது.
ஏற்கனவே பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் இதனால் கலிபோர்னியா முதல் தெற்கு அலபாமா வரை அரோரா என்ற துருவ ஒளி ஏற்படும் என்றும் அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்தது.
துருவ ஒளி என்பது இரவு வானத்தில் பிரகாசமான, சுழலும் திரைச்சீலைகள் போல் தோன்றும். பச்சை நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
அதன்படி வானத்தில் கண்கவர் வான ஒளிக் காட்சிகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா முதல் இங்கிலாந்து வரை வான ஒளிக் காட்சிகளை பார்க்க முடிந்தது.
லிவர்பூல், கென்ட், நார்போக் உள்பட இங்கிலாந்து முழுவதும் துருவ ஒளி தெரிந்தது. சூரியப்புயல் தாக்கிய பிறகு அமெரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் துருவ ஒளி வானில் தோன்றியது.
இதை பார்த்து மக்கள் பரவசமடைந்தனர். சூரியப்புயலின் தாக்கம் நீடிக்கும் என்பதால் செயற்கைக்கோள்கள், மின்கட்டமைப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan