சூர்யா அரசியலுக்கு அடித்தளம் போடுகிறாரா?
12 வைகாசி 2024 ஞாயிறு 09:12 | பார்வைகள் : 1985
நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் முதல் பாக்யராஜ், டி ராஜேந்தர் வரை ஏற்கனவே பலர் அரசியலுக்கு வந்த நிலையில் தற்போது தளபதி விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என்பதும் விரைவில் விஷால் அரசியலுக்கு வரவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக நடிகர் சூர்யா அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக அவர் தமிழ்நாடு முழுவதும் தனது நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது
தற்போது சூர்யா நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் 60 மாவட்டங்களிலும் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது, எதிர்கால திட்டமிடலை முன்வைத்து இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை சூர்யா நற்பணி இயக்கத் தலைமை நடத்தி வருகிறது செய்திகள் வெளியாகியுள்ளது .
அந்த வகையில் விழுப்புரம், கடலூர் கிழக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல்களை வைத்து பார்க்கும்போது சூர்யாவும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் சூர்யாவின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.