கட்டளைக்குப் பணிய மறுத்த சாரதி - காவற்துறையினர் படுகாயம்!
12 வைகாசி 2024 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 4958
காவற்துறையினரின் கட்டளைக்குப் பணிய மறுத்த ஒரு சிற்றுச் சாரதி, காவற்துறையினரின் வாகனத்தை மோதியnறிந்து விட்டுச் சென்றுள்ளார்.
இதில் மூன்று காவற்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். 24. 35, மற்றும் 36 வயதுடைய இந்தக் காவற்துறை அதிகாரிகள் உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் முலூசிலுள்ள ((Mulhouse (Haut-Rhin))கிங்கேர்ஸ்ஹைம் (Kingersheim) நகரில் இன்று காலை 6h45 அளவில் நடந்துள்ளது.
நகரத்திற்குள் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் வாகனத்தைச் செலுத்திய இவரை காவற்துறையினர் துரத்திச் சென்று நிறுத்தப் பணித்த போது, வேக வீதியில் தவறான எதிர்த்திசையில் திரும்பிய இவர் துரத்தி வந்த காவற்துறையினரின் வாகனத்தை மணிக்கு 100 கிலோமீற்றரிற்கும் அதிகமாக வேகத்தில் மோதி உள்ளார்.
இதிலேயே சிற்றுந்திற்குள் இருந்த காவற்துறை அதிகாரிகள் படுகாயமுற்றுள்ளனர்.
இதே விபத்தில காயமடைந்த 37 வயதுடைய குற்றவாளிச் சிற்றுந்துச் சாரதி, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில், சிகிச்சையின் பின்னர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட உள்ளார்.