Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி?

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு அனுமதி?

12 வைகாசி 2024 ஞாயிறு 11:14 | பார்வைகள் : 10671


 

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், படிப்படியாக திட்டமிட்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வணிகத் தேவைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது பொருளாதாரத்திற்கு சில பங்களிப்பு செய்வதற்காக பொருளாதார செயல்முறை மற்றும் வணிக செயல்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கே தற்போது கட்டுப்பாடு உள்ளது. அடுத்த வருடத்தில் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம். எனினும் படிப்படியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

மேலும், நாட்டில் தற்போதுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்று வழிகள் இல்லை ன நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்