Paristamil Navigation Paristamil advert login

ஆந்திரா: குண்டூர் தொகுதி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.5785 கோடி

ஆந்திரா: குண்டூர் தொகுதி வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.5785 கோடி

12 வைகாசி 2024 ஞாயிறு 16:08 | பார்வைகள் : 1614


ஆந்திரா மாநிலம் குண்டூர் எம்.பி., தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.5,785.28 கோடி மட்டுமே என தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் பொது தேர்தலில் தற்போது வரையில் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. நாளை 13 ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. 1,717 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவை தவிர ஒடிசா மற்றும் ஆந்திரா மாநில சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்துவிவர பட்டியலை வேட்பு மனுவுடன் அளிப்பது வழக்கம். அந்த வகையில் குண்டூர் எம்.பி.,க்கு போட்டியிடும் தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர் தாக்கல்செய்துள்ள சொத்துமதிப்பு பட்டியல் அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தெலுங்குதேசம் கட்சி சார்பில் குண்டூர் எம்.பி., க்கு போட்டியிடுபவர் சந்திரசேகர் பெம்மாசானி. இவர் அளித்துள்ள சொத்து விவர பட்டியிலில் தனக்கு அசையும் சொத்தாக ரூ.5,598 கோடி யும் அசையா சொத்தாக ரூ.106 கோடியும் உள்ளதாகவும், சுமார் ரூ.1038 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

48 வயதாகும் பொம்மாசானி 1999-ல் விஜயவாடாவில் மருத்துவம் படித்தார். 2005-ல் பென்சில்வேனியாவில் எம்.டி படிப்பை முடித்துள்ளார். மேலும் யூ வேர்ல்டு என்ற ஆன்லைன் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தற்போது முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

மைக்ரோசாப்ட், கோகோ-கோலா, உபெர் டெக்னாலஜிஸ் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அமெரிக்க வர்த்தக நிறுவனங்களில் பொம்மாசானி முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நான்காம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,700-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 476 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் . 24 வேட்பாளர்கள் தங்களிடம் எந்த சொத்தும் இல்லை என்றும் அறிவித்து உள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்