Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பூங்கா, தோட்டங்கள் மூடப்படுகின்றன!

பரிஸ் : பூங்கா, தோட்டங்கள் மூடப்படுகின்றன!

12 வைகாசி 2024 ஞாயிறு 17:31 | பார்வைகள் : 10927


பரிசில் உள்ள பல்வேறு பூங்காக்கள், தோட்டங்கள், கல்லறைகள் போன்றவை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூடப்பட்டுகின்றன.

மாலை 4.30 மணி முதல் அவை மூடப்படுவதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. புயல் காற்றும், ஆலங்கட்டி மழையும் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை காரணமாக அவை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரிசில் பலத்த மழைப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக Hauts-de-Seine மற்றும் Yvelines  மாவட்டங்களில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெள்ளமும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்