Paristamil Navigation Paristamil advert login

மழலையர் பள்ளியில் குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த ஆசிரியர்....

மழலையர் பள்ளியில் குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த ஆசிரியர்....

17 ஆடி 2023 திங்கள் 08:31 | பார்வைகள் : 5293


சீனாவின் ஜியோசுவோவில் உள்ள மழலையர் பள்ளி பெண் ஆசிரியை ஒருவருக்கு 25 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததற்காக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவின் ஜியோசுவோவில் உள்ள மழலையர் பள்ளியில் வாங் யுன் (39) என்ற பெண் ஆசிரியை கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது சக ஊழியருடன்  தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக பழிவாங்கும் நோக்கில் மாணவர்களின் உணவில் விஷத்தை வைத்துள்ளார்.

இந்த உணவு இனிப்பு சுவை கொண்ட அரிசி சார்ந்த கஞ்சி ஆகும்.

வாங் தனது பள்ளி குழந்தைகளின் காலை உணவில் சோடியம் நைட்ரைட் எனப்படும் வேதிப்பொருளை கலந்துள்ளார்.

காலை உணவை சாப்பிட்ட பிறகு மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

25 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு குழந்தைக்கு உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தமை  குறிப்பிடத்தக்கது.

மற்றைய  24 குழந்தைகளின் உடல்நலமும் மோசமாக காணப்பட்டுள்ளது.

27 ஆம் திகதி மார்ச்  மாதம் 2019 அன்று வாங் மீது குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த வழக்கில் பெண் ஆசிரியர் வாங், கைது செய்யப்பட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாசுவோ நகர இடைநிலை மக்கள் நீதிமன்றம் அவருக்குக் தூக்குத் தண்டனையை வழங்கியிருந்தது.

ஆனால், ஆசிரியை தனது மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீடு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழன் கிழமை அதே நீதிமன்றம் வாங்கின் அடையாளத்தை சரிபார்த்து, மரணதண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அழைத்துச் சென்று மரண தண்டனையை நிறைவேற்றியது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்