Paristamil Navigation Paristamil advert login

முதல் முறையாக வரலாறு படைத்த அல்காரஸ்...

முதல் முறையாக  வரலாறு படைத்த அல்காரஸ்...

17 ஆடி 2023 திங்கள் 08:11 | பார்வைகள் : 2936


விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் முதல் முறையாக வென்று

இவரை எதிர்த்து களமிறங்கிய 7 முறை சாம்பியனும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 36 வயதான ஜோகோவிச்சை, 20 வயதான அல்காரஸ் எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச், முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார்.

இதனால், சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் எளிதாக வென்றுவிடுவார் என ரசிகர்கள் எண்ணியுள்ளனர்.

அல்காரஸ் அனைவருக்குமே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

ஜோகோவிச் ஆக்ரோஷமாகவும், அதே வேளை தன்னுடைய தனித்தன்மையையும் வெளிப்படுத்தினார்.

ஆனால், ஜோகோவிச்சுக்கு கார்லோஸ் அல்காரஸ், சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

2வது செட்டை அல்காரஸ் 7க்கு6 என்று கைப்பற்றிய நிலையில், 3வது செட்டை 6க்கு 1 என்று எளிதில் வென்றார்.

ஜோகோவிச் தன்னுடைய அனுபவத்தையும், சக்தியையும் திரட்டி 4வது செட்டை 6க்கு3 என்ற கணக்கில் தனதாக்கினார்.

இதனால் சாம்பியனை தீர்மானிக்கும் கடைசி செட் வரை ஆட்டம் சென்றது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி செட்டை 6க்கு4 என்ற கணக்கில் கார்லோஸ் கைப்பற்றினார்.

4 மணித்தியாலம்  42 நிமிடம் நீடித்த இந்தப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் 1க்கு6, 7க்கு6, 6க்கு1, 3க்கு6, 6க்கு4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் தொடர்ந்து 4 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்