ரஷ்ய எல்லை நகரில் ஏவுகணை தாக்குதல் - இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்
13 வைகாசி 2024 திங்கள் 08:52 | பார்வைகள் : 3225
பெல்கோரோட் குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 13 கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய எல்லை நகரான பெல்கோரோட்(Belgorod) மீது ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏவுகணை தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஏவுகணை துண்டுகள் குடியிருப்பு கட்டிடம் ஒன்றை இடித்ததன் காரணமாக குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதோடு 20 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் மீட்பு பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தீவிரமாக தேடினர், இதன் விளைவாக அவசரகால சேவைகள் 13 உடல்கள் மீட்கப்பட்டதாக உறுதிப்படுத்தின.
உள்ளூர் அதிகாரிகளால் பகிரப்பட்ட படங்கள், கட்டிடத்தின் பெரும் பகுதி அழிக்கப்பட்டதை காட்டுகிறது.
உக்ரைன் டோக்கா-யு ஏவுகணையை( Tochka-U TRC missile) பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் உக்ரைன் இந்த சம்பவம் குறித்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
பெல்கோரோட் பகுதியில் நடத்தப்படும் அதிகரித்து வரும் தாக்குதல்களில் இதுவும் ஒன்று, இருப்பினும் பெரும்பாலானவை கிராமப்புற பகுதிகளை இலக்கு வைத்தது.
இந்த நகரமும் ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.