ஆப்பிரிக்க நாட்டில் சிறார்களுக்கு காத்திருக்கும் ஆபத்து - அதிகாரிகள் எச்சரிக்கை
13 வைகாசி 2024 திங்கள் 09:01 | பார்வைகள் : 3438
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மர்ம நோய் பாதிப்பால் இதுவரை நால்வர் மரணமடைந்துள்ள நிலையில், மக்கள் கடும் பீதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கம் தரப்பில் இறப்பு எண்ணிக்கை உறுதி செய்துள்ளனர்.
நைஜீரியாவின் Zamfara பகுதியில் சிறார்கள் ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் 177 பேர்கள் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சுகாதார அமைச்சரான மருத்துவர் Aisha Anka அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நோய் மற்றும் இறப்புக்கு வழிவகுத்த அறிகுறிகளின் விவரங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதில் வயிறு விரிவடைதல், அடிவயிற்றில் திரவம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் பெரிதாகி இருப்பது, காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் ஆகியவை நோயின் அறிகுறிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
நைஜீரியா முழுமையும் தற்போது இதே அறிகுறிகளுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் முக்கியமாக மூன்று கிராமங்களில் இந்த நோய் அதிகமாக காணப்படுவதாகவும் மருத்துவர் Aisha Anka தெரிவித்துள்ளார்.
மேலும், சிறார்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பாதிப்புகள் அனைத்தும் தண்ணீர் நுகர்வுடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை, நான்கு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், 177 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக Kano மாகாணத்தின் Gundutse கிராமத்தில் மர்ம நோய் பாதிப்பால் 45 பேர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியானது.
Zamfara பகுதியில் பரவும் அதே மர்ம நோய் தான் 45 பேர்களை பலிகொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், நோய் பாதிப்பு அதிகமாக இருந்த போது நாளுக்கு குறைந்தது ஐவரின் சடலங்களை Gundutse கிராம மக்கள் அடக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.