Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் €4 பில்லியன் யூரோ முதலிடும் Microsoft நிறுவனம்!

பிரான்சில் €4 பில்லியன் யூரோ முதலிடும் Microsoft நிறுவனம்!

13 வைகாசி 2024 திங்கள் 10:59 | பார்வைகள் : 6846


அமெரிக்காவைச் சேர்ந்த Microsoft  நிறுவனம் பிரான்சில் 4 பில்லியன் யூரோக்களை முதலிட்டுள்ளது. பிரான்சில் தரவுகள் மையத்தினை வலுப்படுத்த இந்த முதலீடு அவசியம் என Microsoft  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’பிரான்சில் தரவுகள் மையமு, செயற்கை நுண்ணறிவு (AI) வலுப்படுத்தவும், இணையவழி சேமிப்புக்களை (cloud) போன்ற தரவுகளை பிரான்சில் உருவாக்க இந்த தொகையை முதலிடுவதாக இன்று மே 13, திங்கட்கிழமை Microsoft   அறிவித்துள்ளது. 

“நாம் பிரான்சில் முதன்முறையாக இதுபோன்ற பெரும் தொகையை முதலிடுகிறோம். உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும், பிரான்சின் கிழக்கு நகரமான Mulhouse இல் ஒரு தரவுகள் மையம் ஒன்றையும் 2025 ஆம் ஆண்டில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்!” எனவும் ”பிரான்சில் ஒரு மில்லியன் பேருக்கான வேலை வாய்ப்பை 2027 ஆம் ஆண்டுக்குள் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்’ எனவும் Microsoft    நிறுவனத்தின் பிரான்சுக்கான அதிகாரி தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்