ஒலிம்பிக் Pass Jeux இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்!

13 வைகாசி 2024 திங்கள் 13:48 | பார்வைகள் : 8342
ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தில் பரிசின் சில பகுதிகளில் பயணிக்க அனுமதி பெற பெற வேண்டும்.
இதெற்கென பிரத்யேகமாக QR குறியீடு கொண்ட ‘பாஸ்’ ஒன்றை (Pass Jeux) பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை இணையத்தளமூடாக பதிவு செய்துகொண்டு பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மே 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த Pass Jeux இனை பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்குறித்த புகைப்படத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயணிக்க இந்த பாஸ் கட்டாயமானதாகும். (நன்றி le Parisien)