■ 15 பில்லியன் முதலீட்டை பெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு..!!
13 வைகாசி 2024 திங்கள் 14:07 | பார்வைகள் : 3656
Choose France எனும் முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்று முடிவடைந்துள்ளது. மொத்தமாக 15 பில்லியன் யூரோக்கள் முதலீடு இவ்வருடம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான Microsoft, பிரான்சில் 4 பில்லியன் யூரோக்களை முதலிட்டுள்ளது. இவை உட்பட மொத்தமாக 15 பில்லியன் யூரோக்களை வெளிநாட்டு முதலீட்டார்கள் பிரான்சில் முதலிட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டைப் போல நடப்பு ஆண்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தமான நாடாக பிரான்ஸ் இருந்துள்ளது.
இவ்வருடம், உலகம் முழுவதும் இருந்து 180 வரையான முதலீட்டாளர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
மொத்தமாக 10,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும், முதலீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும், வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.