'கோட்' படத்தில் கேப்டன் விஜயகாந்த் காட்சிகள் தொடர்பில் ஆச்சரிய தகவல்..!
13 வைகாசி 2024 திங்கள் 15:39 | பார்வைகள் : 1617
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தோன்ற இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது காட்சி எத்தனை நிமிடங்கள் என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய ‘கோட்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் திட்டமிட்டபடி படத்தை வெளியிடப்பட தீவிரமாக பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘கோட்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் கேப்டன் விஜயகாந்த், த்ரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு மற்றும் சில சிஎஸ்கே வீரர்கள் தோன்ற இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜயகாந்த் மட்டும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தோன்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேப்டனின் காட்சிகள் இந்த படத்தில் இரண்டரை நிமிடங்கள் உள்ளதாகவும் அந்த இரண்டரை நிமிட காட்சிகள் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் காட்சிகள் என்றும் கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் கேப்டன் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் பார்க்க உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.