Paristamil Navigation Paristamil advert login

விடுதலைப் புலிகள் மீதான தடை: 5 ஆண்டுகள் நீட்டித்தது மத்திய அரசு

 விடுதலைப் புலிகள் மீதான தடை: 5 ஆண்டுகள் நீட்டித்தது மத்திய அரசு

14 வைகாசி 2024 செவ்வாய் 10:24 | பார்வைகள் : 2724


விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பினர், 1991ல், நம் நாட்டின், முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்தனர். அதன் பின், நம் நாட்டில், புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், பிரபாகரன், 2009ல், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின், இலங்கையில், அவர்களது நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை, இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.

5 ஆண்டுகள் நீட்டிப்பு
இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்