ஒலிம்பிக் : வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள துப்பரவு பணியாளர்கள்..!!

14 வைகாசி 2024 செவ்வாய் 17:05 | பார்வைகள் : 7514
ஒலிம்பிக் போட்டிகளின் போது பரிசைச் சேர்ந்த துப்பரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
FTDNEEA எனும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களே வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கழிவுகள் சேகரிப்பாளர்கள், சாரதிகள், கழிவுநீர் துப்பரவு பணியாளர்கள், கிருமி நீக்கி ஊழியர்கள், கழிவுகளை எரியூட்டும் இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போன்றவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மே 14 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமையில் இருந்து 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போது, அதிகளவான பணிச்சுமை இருக்கும் என்பதை குறிப்பிட்டு அவர்கள் ஊதிய உயர்வை கோரியுள்ளனர்.