அவல் இட்லி
15 வைகாசி 2024 புதன் 07:27 | பார்வைகள் : 965
உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் ஒரு முறை செய்து கொடுத்தால் மீண்டும் மீண்டும் வேண்டுமென்று கேட்பார்கள். இந்த இட்லிக்கு காரமான தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் வைத்து சாப்பிட்டாலாம். சரி வாங்க.. இப்போது இந்த இட்லி எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
தயிர் - 1 கப்
சோடா உப்பு - சிறிதளவு
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
அவல் இட்லி செய்ய முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் அவலை போட்டு நன்கு அரைக்க வேண்டும். இப்பொழுது, ஒரு பாத்திரத்தில் அரைத்த அவலைப் போட்டவும். அதனுடன் அரிசி மாவு, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு இட்லி மாவுப் பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
கடைசியாக சோடா உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலக்கி, அதை ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் சோடா உப்பு போடும் முன் அவற்றை மிக்ஸியில் மறுபடியும் போட்டு ஒருமுறை அரைத்து எடுக்கலாம். இப்போது இட்லி மாவு தயார்.
இதனை அடுத்து அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து, அதில் எப்போதும் போல தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு இட்லி தட்டில் ஊற்றி வைத்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்தால் ஆரோக்கியமான அவல் இட்லி ரெடி..!!