■ கிழக்கு நோக்கி விஸ்தரிக்கப்பட்டும் 11 ஆம் இலக்க மெற்றோ! - அடுத்த மாதம் சேவைக்கு..
15 வைகாசி 2024 புதன் 07:52 | பார்வைகள் : 5121
11 ஆம் இலக்க மெற்றோ சேவை பரிசின் கிழக்குப் பகுதியில் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் புதிய நிலையங்களுக்கு மெற்றோ பயணிக்க உள்ளது.
Rosny-Bois-Perrier நகரம் வரை மொத்தமாக ஆறு புதிய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றினை பிரதமர் Gabriel Attal வரும் ஜூன் 13 ஆம் திகதி திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Serge-Gainsbourg ,
Romainville-Carnot,
Montreuil-Hôpital,
La Dhuys,
Coteaux Beauclair,
Rosny-Bois-Perrier
ஆகிய ஆறு நிலையங்களும் அன்றைய நாளில் திறந்துவைக்கப்பட்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன.
இந்த விஸ்தரிப்பினால் நாள் ஒன்றுக்கு 190,000 பயணிகள் வரை பயணடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த விஸ்தரிப்புக்காக 1.3€ பில்லியன் யூரோக்கள் செலவிட்டுள்ளதாக RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.