என் அனுமதியை கேட்காமலேயே என்னை பெற்றெடுத்துள்ளார்கள்! பெற்றோர் மீது வழக்கு தொடுத்த பெண்
15 வைகாசி 2024 புதன் 10:56 | பார்வைகள் : 1090
என்னுடைய அனுமதியை பெறாமலும், என்னை தொடர்பு கொள்ளாமலும் என்னை பெற்றெடுத்துள்ளார்கள் என்று பெற்றோர் மீது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியைச் சேர்ந்த பெண் தியாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் அறியப்படுவார். இவர், தன்னுடைய அனுமதியின்றி தன்னை பெற்றெடுத்ததாக பெற்றோர் மீது வழக்கு தொடுத்த சம்பவம் தற்போது பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தியாஸ் பேசிய வீடியோவில், "நான் இங்கு இருப்பதற்கு விரும்புகிறேனா, இல்லையா என்று நான் பிறப்பதற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும்.
ஆனால், என் பெற்றோர்கள் அவ்வாறு செய்யவில்லை, அதற்கு முயற்சிக்கவும் இல்லை. எனது விருப்பத்திற்கு எதிராக என்னை பெற்றெடுத்ததற்கு பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.
என்னுடைய குழந்தைகளை நான் கருத்தரித்து பெற்றெடுக்காமல், தத்தெடுத்துள்ளேன். அவர்கள் இங்கு இருப்பது என் தவறல்ல. அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற முயற்சி செய்வேன்.
நீங்கள் இப்போது கர்ப்பமாக இருந்தால் மனநல மருத்துவரை சந்தித்து, குழந்தைகள் உண்மையில் இங்கே பிறக்க விரும்புகிறார்களா என்று கேட்டறிய வேண்டும்.
என்னுடைய பெற்றோர்கள் அப்படி செய்யாததால் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன் பெற்றோருக்கு எதிராக குழந்தைகள் வழக்குத் தொடர கற்றுக்கொடுத்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.