’கரீனா’ பெயர் டாட்டூவை மாற்றிய கணவர்... பாலிவுட்டில் அடுத்த விவாகரத்து?
15 வைகாசி 2024 புதன் 13:57 | பார்வைகள் : 8374
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் தனது மனைவி கரீனா கபூரின் பெயரை டாட்டூவாக கையில் போட்டிருந்தார். அதனை அவர் மாற்றி இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சயிஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர். இவர்களுக்குத் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில், இருவருமே சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றனர். சயிஃப் அலிகான் தனது இடதுகையில் கரீனாவின் பெயரை டாட்டூவாகப் பதிந்திருந்தார். இது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.
இப்படி இருக்கையில், சயிஃப் இப்போது தனது ’கரீனா’ டாட்டூவை மாற்றியிருக்கிறார். அதாவது, ‘கரீனா’ என்ற பெயரில் இருந்து திரிசூல வடிவத்திற்கு அந்த டாட்டூவை மாற்றி இருக்கிறார். இதுதான் பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இருவரும் திருமண உறவில் இருந்து பிரிய இருக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், சயிஃப் வட்டாரத்தில் இது ஒரு படத்திற்காக அவர் மாற்றிய தற்காலிக டாட்டூ என்று சொல்லி வருகின்றனர். ஆனால், இது குறித்து சயிஃப்- கரீனா இருவரும் மெளனம் காத்து வருவது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan