இரவு முழுவதும் Nouvelle-Calédonie தீவில் கலவரம்! - இருவர் பலி, நூறு பேர் வரை காயம்..!!
15 வைகாசி 2024 புதன் 14:21 | பார்வைகள் : 3505
பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Nouvelle-Calédonie தீவில் கடந்த பல வாரங்களாகவே வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக கடந்த சில நாட்களாக வன்முறை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
குறித்த தீவுக்கு சுயாட்சி அதிகாரம் கோரி பல ஆண்டுகளாக அங்கு போராட்டம் இடம்பெற்று வருகிறமை அறிந்ததே. இந்நிலையில், அங்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற உள்ளது. இந்த தேர்தலில் புதிய குடியேற்றவாதிகளும் வாக்களிக்க முடியும் என ஒரு சட்டம் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பூர்வீகக் குடிகளின் பெருமான்மை இழக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இந்த வன்முறை இடம்பெற்று வருகிறது.
இந்நிலையிலேயே Nouvelle-Calédonie தீவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இரு இரவுகளில் அங்கு இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 130 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.