Paristamil Navigation Paristamil advert login

■ தப்பிச் சென்ற Mohamed Amra.. பிடியானை பிறப்பித்துள்ள இண்டர்போல்..!

■ தப்பிச் சென்ற Mohamed Amra.. பிடியானை பிறப்பித்துள்ள இண்டர்போல்..!

15 வைகாசி 2024 புதன் 13:30 | பார்வைகள் : 5711


Euro நகரில் ஆயுதப்படையின் உதவியுடன் தப்பிச் சென்ற குற்றவாளி Mohamed Amra இனைப் பிடிக்க  சர்வதேச உளவுத்துறையான இண்டர்போல் பிடியானை பிறப்பித்துள்ளது.

அதி முக்கிய குற்றவாளிகளுக்கு பிறப்பிக்கப்படும் 'சிவப்பு எச்சரிக்கை' (notice rouge) அறிக்கையினையே இண்டர்போல் வெளியிட்டுள்ளது. இதில் சரவதேச பிடியானை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி Mohamed Amra உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தப்பிச் சென்ற Mohamed Amra தொடர்பான விசாரணைகளை பிரெஞ்சு அதிரடிப்படையினர் (GIGN) மேற்கொண்டுவருகின்றனர். குற்றவாளியின் தாயார் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 'மகன் தப்பிச் செல்லும் திட்டத்தில் இருந்தமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இரு காவல்துறையினருக்கும் இன்று பாராளுமன்றம், சிறைச்சாலை, தொழிற்சங்க அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்