Paristamil Navigation Paristamil advert login

விளையாட்டு நட்சத்திரங்களில்  பெரும் கோடீஸ்வரர் யார்..? Forbes வெளியிட்ட புதிய பட்டியல்

விளையாட்டு நட்சத்திரங்களில்  பெரும் கோடீஸ்வரர் யார்..? Forbes வெளியிட்ட புதிய பட்டியல்

17 வைகாசி 2024 வெள்ளி 08:47 | பார்வைகள் : 1011


Forbes வெளியிட்டுள்ள கோடீஸ்வர விளையாட்டு நட்சத்திரங்களின் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார் போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

சவுதி அரேபிய கால்பந்து அணி ஒன்றில் இணைந்துள்ள நிலையிலேயே , உலகிலேயே அதிக சம்பளம் பெறும் விளையாட்டு நட்சத்திரமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னிலைப் பெற்றுள்ளார்.

ஒரு கால்பந்து நட்சத்திரமாக ரொனால்டோ ஒரே ஆண்டில் 260 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளது, அவரை தமது தொழில்முறை வாழ்க்கையில் நான்காவது முறையாக முதலிடத்தில் கொண்டுவந்துள்ளது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளில் இருந்து வெளியேறி, ஆண்டுக்கு 200 மில்லியன் டொலர் சம்பளத்திற்கு சவுதி அரேபியாவின் Al Nassr அணியில் கடந்த ஆண்டு இணைந்தார்.

அது மட்டுமின்றி, கிரிப்டோ நிறுவனமான Binance, உடற்பயிற்சி செயலியான Erakulis, Nike, Herbalife, Clear Haircare மற்றும் Whoop ஆகிய நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தமும் அவரை பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் இணைத்துள்ளது.

Forbes வெளியிட்டுள்ள கோடீஸ்வர விளையாட்டு நட்சத்திரங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஸ்பெயின் நாட்டவரான கோல்ஃப் நட்சத்திரம் Jon Rahm. இவர் ஆண்டுக்கு 198 மில்லியன் டொலர் தொகையை தமது விளையாட்டின் மூலமாகவும் விளம்பரங்களால் 20 மில்லியன் டொலர் தொகையும் சம்பாதிக்கிறார்.

மூன்றாவது இடத்தில் 135 மில்லியன் டொலர் தொகையுடன் Lionel Messi உள்ளார். ஆனால் விளம்பர ஒப்பந்தங்களால் மெஸ்ஸி பல மில்லியன் டொலர்கள் சம்பாதிக்கிறார் என்றே கூறப்படுகிறது.

நான்காவது மற்றும் 5வது இடத்தில் NBA நட்சத்திரங்கள் LeBron James மற்றும் Giannis Antetokounmpo ஆகியோர் உள்ளனர். 6வது இடத்தில் பிரான்ஸ் கால்பந்து நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே உள்ளார். இவர் ஆண்டுக்கு 110 மில்லியன் டொலர் சம்பளமாக பெறுகிறார்.

7வது இடத்தில் இருக்கும் நெய்மர் ஆண்டுக்கு 108 மில்லியன் டொலர் சம்பாதிக்கிறார். அத்துடன் விளம்பர ஒப்பந்தங்களால் 8 மில்லியன் டொலர் தனியாக சம்பாதிக்கிறார்.

8வது இடத்தில் 106 மில்லியன் டொலர் தொகையுடன் பிரான்ஸ் நட்சத்திரம் Karim Benzema உள்ளார். 9வது இடத்தில் Stephen Curry (102 மில்லியன் டொலர்), 10வது இடத்தில் 100.5 மில்லியன் டொலர் தொகையுடன் Lamar Jackson உள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்