தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி...?
17 வைகாசி 2024 வெள்ளி 08:41 | பார்வைகள் : 701
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஓய்வு குறித்து தனது திட்டம் குறித்து கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பிளேஆப் சுற்றுக்கு செல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் விராட் கோலி தனது ஓய்வு திட்டம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில்,
''ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் முடிவு என்ற ஒன்று இருக்கும். என்னால் இறுதிவரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது.
எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய முழு பலத்தையும் நான் விளையாட்டில் காட்டுவேன். ஆனால், நான் ஓய்வை அறிவித்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் என்னை காண முடியாது!'' என தெரிவித்துள்ளார்.
தற்போது 35 வயதாகும் விராட் கோலி, நடப்பு ஐபிஎல் தொடரில் 661 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.