’கறுப்பு நாள்’ - தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்! - போக்குவரத்து பாதிப்பு!

17 வைகாசி 2024 வெள்ளி 15:19 | பார்வைகள் : 7656
தொடருந்து தொழிலாளர்கள் வரும் மே 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை அடுத்து, அன்றைய தினம் பலத்த போக்குவரத்து தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சுக்குள் போக்குவரத்து முடக்கப்பட்டு ‘கறுப்பு நாள்’ என அன்றைய தினத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. RER மற்றும் Transilien சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் போது மேலதிக கொடுப்பனவுகளை வழங்கக்கோரி இந்த வேலை நிறுத்தத்தினை Sud-Rail மற்றும் CGT-Cheminots தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தடைப்படும் தொடருந்துகள் தொடர்பான முழுமையான தகவல்கள் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1