பாடசாலை குழந்தைகளுடன் கிரிக்கெட் - மகிழ்ச்சியில் SRH கேப்டன் பேட் கம்மின்ஸ்
18 வைகாசி 2024 சனி 08:12 | பார்வைகள் : 1718
ஐபிஎல் பதினேழாவது சீசனில் கேப்டனாக பேட் கம்மின்ஸ் தனது முத்திரையைப் பதித்தார்.
கேப்டனாக முதல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை பிளே ஆஃப் வரை அழைத்துச் சென்ற கம்மின்ஸ், தற்போது சற்று குதூகலமாக இருக்கிறார்.
ஆம்., வெள்ளிக்கிழமை கம்மின்ஸ் பாடசாலை குழந்தைகளுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடினார்.
குழந்தைகளின் பந்துவீச்சில் ஷாட்களை அடித்து மகிழ்ந்தார். அந்த காணொளி வைரலாகி வருகிறது.
வியாழக்கிழமை உப்பல் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஹைதராபாத் நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில் SRH நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை. மினி ஏலத்தில் ரூ. 20.5 கோடி கொடுத்து வாங்கிய உரிமையாளரின் நம்பிக்கையை கம்மின்ஸ் காப்பாற்றினார்.
கம்மின்ஸின் தலைமையின் கீழ், ஆரஞ்சு ஆர்மி Record Breaker Tag-ஐ பெற்றது. 20 நாட்களில், ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ளது SRH.
உப்பலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ஓட்டங்கள் எடுத்த ஐதராபாத் அணி, ஆர்சிபிக்கு எதிராக 287 ஓட்டங்கள் குவித்தது.
15 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஹைதராபாத் அணியின் எதிரணி யார்? என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு போட்டியுடன் முடிவு செய்யப்படும்.