வெற்றிமாறன் அடுத்த படத்தில் கவின்..
18 வைகாசி 2024 சனி 08:59 | பார்வைகள் : 1369
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் கவின் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர்களுடன் கவின் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் வெற்றிமாறன், கவின், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் உள்ளனர் என்பதும் இதனை அடுத்து வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ’மாஸ்க்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கவின் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் ஆகிய மூன்று திரைப்படங்களும் ஆங்கில டைட்டில்கள் இருந்தது என்பதும் நான்கு எழுத்தை கொண்டதாக இருந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ‘கிஸ்’ என்ற டைட்டிலும் அதேபோல் உள்ளது. இந்த நிலையில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கும் ‘மாஸ்க்’ என்ற ஆங்கில டைட்டில் மற்றும் 4 எழுத்தை கொண்டுள்ளதாக உள்ளது என்பதும் இதனால் சென்டிமென்ட் ஆக இந்த படமும் வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கவின் நடித்த ’ஸ்டார்' திரைப்படத்தில் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் தற்போது வெற்றிமாறன் தயாரிப்பிலேயே கவின் நடிக்க இருப்பது நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.