4 கைகள் மற்றும் 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த சிலந்தி இரட்டையர்கள்

18 வைகாசி 2024 சனி 09:50 | பார்வைகள் : 3404
இந்தோனேசியாவில் 4 கைகள், 3 கால்கள், ஒரே ஒரு ஆண்குறியுடன் இரட்டையர்கள் ஒட்டிப்பிறந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2 மில்லயனில் 1 முறையே இந்த மாதிரியான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த வகையான இரட்டையர்களுக்கு மருத்துவ பெயரில் இசோபேகஸ் த்ரிபஸ் (Ischiopagus Tripus) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இவர்களை சிலந்தி இரட்டையர்கள் (Spider Twins) என்றும் அழைக்கின்றனர்.
இந்த வகை இரட்டை குழந்தைகள் கடந்த 2018 -ம் ஆண்டு இந்தோனேசியாவில் பிறந்துள்ளனர். தற்போது, அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகே இந்த நிகழ்வு உலகிற்கு தெரியவந்துள்ளது.
அவர்கள் அந்த அறிக்கையில், "உடலின் மேல்புறத்தில் மட்டுமல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது அரிதான விடயம்.
இதில் உள்ள இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை 60 சதவீதம் உயிரிழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த இரட்டை குழந்தைகள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர்.
இவர்களின் உடல் அமைப்பின் காரணமாக முதல் 3 வருடத்திற்கு அவர்களால் உட்கார முடியாத நிலைமை இருந்தது. படுத்தவாறு மட்டுமே இருக்க முடிந்தது.
பின்னர், மருத்துவர்கள் மேற்கொண்ட சிறிய அறுவை சிகிச்சையின் பிறகு தற்போது அவர்களால் அமர முடிகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1