பரிஸ் : பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவர் கைது!

19 வைகாசி 2024 ஞாயிறு 05:02 | பார்வைகள் : 10109
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
18 மற்றும் 16 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் அறிந்திராத இருவரும், டெலிகிராம் செயலி ஊடாக தொடர்பில் இருந்ததாகவும், இருவரும் இணைந்து தீவிர பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும், தாக்குதல் ஒன்றை மேற்கொண்ட திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.