■ போக்குவரத்து தடை - முழுமையான தகவல்கள்.,..!
20 வைகாசி 2024 திங்கள் 06:00 | பார்வைகள் : 8533
நாளை மே 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இல் து பிரான்சுக்குள் பல்வேறு தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
● RER
RER A : இரண்டில் ஒன்று இயங்கும்.
RER B : இரண்டில் ஒன்று இயங்கும்.
RER C : ஐந்தில் இரண்டு இயங்கும். (நெருக்கடியான நேரத்தில் மட்டும் ஒவ்வொரு 15 தொடக்கம் 30 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஒரு தொடருந்து இயங்கும்)
Paris Austerlitz இல் இருந்து Invalides வரை தொடருந்து இயக்கப்படாது.
RER D : ஐந்தில் ஒரு சேவை மாத்திரம் இயங்கும். Gare de Lyon - Châtelet-les-Halles நிலையங்களுக்கிடையில் உள்ளக இணைப்பு (L'interconnexion ) தடைப்படும்.
RER E : நெருக்கடியான நேரத்தில் மட்டும் ஐந்தில் இரண்டு சேவை இயக்கப்படும். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை தொடருந்து சேவைகள் முற்றாக தடைப்படும்.
***
● Transilians
Ligne H : மூன்றில் ஒன்று.
Ligne J : மூன்றில் ஒன்று.
Ligne L : மூன்றில் ஒன்று.
Ligne N : மூன்றில் ஒன்று.
Ligne P : இரண்டில் ஒன்று.
ஆகிய சேவைகள் இயங்கும்.
Ligne R : நெருக்கடியான நேரத்தில் மட்டும் ஐந்தில் ஒரு தொடருந்து இயக்கப்படும்.
Ligne U : மூன்றில் ஒன்று.
Ligne V : ஒருமணிநேரத்துக்கு ஒரு தொடருந்து இயக்கப்படும்.
**
● Trams
T4 : ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒரு ட்ராம் Aulnay-Sous-Bois மற்றும் Bondy இடையே இயக்கப்படும். Gargan இல் இருந்து Montfermeil (மருத்துவமனை தரிப்பிடம்) வரை ட்ராம் இயக்கப்படாது.
T11 : ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருதடவை ட்ராம் இயக்கப்படும்.
T12 : வழமை போல் இயங்கும்.
T13 : வழமை போல் இயங்கும்