இன்று மீண்டும் பாதுகாப்புச் சபை கூடுகிறது.. ஜனாதிபதி மக்ரோன் கலந்துகொள்கிறார்..!
20 வைகாசி 2024 திங்கள் 06:01 | பார்வைகள் : 9839
Nouvelle-Calédonie தீவில் வன்முறைச் சம்பவம் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை பாதுகாப்புச் சபை (conseil de défense) கூட உள்ளது.
பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Nouvelle-Calédonie தீவில் கடந்த ஒருவாரமாக பெரும் வன்முறைகள் பதிவாகி வருகின்றன. இரு ஜொந்தாமினர் உள்ளிட்ட ஆறு பேர் இந்த வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். விமான நிலையம் முடக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்நிலையி, இன்று திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பாதுகாப்புச் சபை கூட உள்ளது. உள்துறை அமைச்சர், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த ஒருவாரத்தில் பாதுகாப்புச் சபை மூன்றாவது தடவையாக கூடுகிறது. மே 15, 16 ஆம் திகதிகளில் முன்னதாக பாதுகாப்புச் சபை கூடியிருந்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan