பளபளப்பான சருமத்திற்கு பாதாமை எப்படி பயன்படுத்தலாம் ?
23 வைகாசி 2024 வியாழன் 13:19 | பார்வைகள் : 1689
பாதம் நம் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். எனவே இதை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. சருமத்திற்கு பாதாம் என்னென்ன நன்மைகளை வழங்கும் என்று இந்த பதிவில் பார்ப்போம். உங்கள் சருமம் வறண்டு, மந்தமாக இருந்தால், பாதாம் ஒரு நல்ல கூடுதல் உணவாக இருக்கும். அவை உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்.
பாதாமில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருப்பதால் இது ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறனுக்காக அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு ஆரோக்கியமானா உணவுப்பொருள். வைட்டமின் ஈ முகத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள், கருவளையங்கள் மற்றும் வயதான புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.
பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது, இதில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிரம்பியுள்ளதால் இது சருமத்தின் கொழுப்புத் தடையைப் பாதுகாக்கின்றன. ஏனெனில் பாதம் பருவங்களுக்கேற்ற சரும மாற்றங்களையும் சமாளிக்க உதவுகிறது.
இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் உடலில் செரிமானத்தை மேம்படுத்துகிறது.இது தெளிவான மற்றும் கறை இல்லாத சருமத்தை உருவாக்குகிறது. பாதம் இயற்கையான க்ளென்சர் மட்டுமல்ல, இது அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நீக்குகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், பளபளப்பான சருமத்தைப் பெறவும் பாதாம் விழுதை முகத்தில் தேய்துக்கொள்ளலாம்.
பளபளப்பான சருமத்திற்காக நீங்கள் தினமும் பாதாம் பருப்பை உட்கொள்ளலாம். உங்களின் சருமம் தங்கம் மாதிரி ஜொலிக்க வேண்டும் என்றால் சிறிது பாதாமை தயிர் மற்றும் தேனுடன் கலக்கவும். இதை கலந்த பிறகு அதை உங்கள் தோலில் சமமாக தடவி, 15 நிமிடங்கள் ஊறவிடவும். உங்கள் முகத்தை கழுவிய பிறகு, ஐஸ் மசாஜ் செய்யலாம்.
மென்மையான பருத்தி துணியில் சில ஐஸ் கட்டிகளை உருட்டி பின்னர் உங்கள் முகத்தை ஐஸ் கட்டிகளால் மசாஜ் செய்யவும். உங்கள் முகத்தில் நேரடியாக ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டாம், அதற்கு பதிலாக ஒரு துணியை பயன்படுத்தவும். இது உங்களுக்கு தங்கம் போன்ற பளபளக்கும் சருமத்தைப் பெற உதவும்.