விமான கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தம்..!
24 வைகாசி 2024 வெள்ளி 07:23 | பார்வைகள் : 16919
இவ்வார இறுதியில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் (contrôleurs) வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் கட்டுப்பாட்டாளர்களே வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். நாளை சனிக்கிழமை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளதாக நேற்று வியாழக்கிழமை மாலை அறிவித்துள்ளனர்.
விமான சேவைகள் பாதிப்படைய உள்ளன. அது தொடர்பான விபரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan