சீனாவின் போர் பயிற்சியில் துப்பாக்கி ஏந்திய ரோபோ நாய்கள்
24 வைகாசி 2024 வெள்ளி 11:02 | பார்வைகள் : 2921
முதுகில் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ரோபோ நாய்களுடன் சீனா போர்ப்பயிற்சி மேற்கொண்டுவருகின்றது.
இந்நிலையில், ரோபோ நாய்களால் தார்மீகப் பிரச்சினைகள் எழலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சீனா, கம்போடிய படைகளுடன் தனது படைகளும் இணைந்து மேற்கொள்ளும், 15 நாட்கள் நடைபெறும் போர்ப்பயிற்சிக்கு, Golden Dragon என்று பெயரிட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில், முதுகில் இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட ரோபோ நாய்களும் பங்கேற்கின்றன.
ஆனால், இந்த ஆயுதம் தாங்கிய ரோபோ நாய்களால் தார்மீகப் பிரச்சினைகள் எழலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ஆகவே, ஒருபக்கம் இந்த ரோபோ நாய்களை போரில் பயன்படுத்துவதற்கு சர்வதேச அளவில் தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.
ஆனால், இந்த ரோபோ நாய்களால், மனித உயிர்கள் இழப்பு தவிர்க்கப்படலாம் என ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.