மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநருடன் இணைகிறாரா தனுஷ்..?
25 வைகாசி 2024 சனி 07:02 | பார்வைகள் : 10545
கேரளாவில் வெளியான படம் மஞ்சுமெல் பாய்ஸ். சிதம்பரம் பொடுவல் இயக்கியிருந்த அந்தப் படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் சக்கைப்போடு போட்டது.
தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் திரையிடப்பட்ட படமானது மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இந்தச் சூழலில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரத்துடன் தனுஷ் இணையவிருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியானது.
சிதம்பரம் பொடுவல் இயக்கத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ். மஞ்சுமெல் ஊரை சேர்ந்த நண்பர்கள் கோவா செல்ல டூர் பிளான் போட்டு கடைசியில் கொடைக்கானலுக்கு செல்கின்றனர்.
அங்கு குணா குகையில் சிக்கிக்கொள்ளும் அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் இயக்குநர்.சர்வைவல் ஜானரில் வெளியாகியிருந்தாலும் படம் அனைவரையும் கவர்ந்திருந்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான குணா படத்தில் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் கொடைக்கானலில் ஒரு குகையில் எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்தக் குகை குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.
அந்தக் குகையை மையமாக வைத்தும் படத்தில் முக்கியமான இடத்தில் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை இடம்பெற செய்ததும் தமிழ் ரசிகர்களை படத்துடன் ரொம்பவே கனெக்ட் ஆக செய்திருந்தது.
இதன் காரணமாக அவர் விரைவில் தமிழில் படம் இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சிதம்பரம் தமிழில் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கதைக்களம் கண்டிப்பாக வித்தியாசமானதாகவும் புதிதாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan