Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்  கொடூரச் சம்பவம்... 2 பேர் பலி

அமெரிக்காவில்  கொடூரச் சம்பவம்... 2 பேர் பலி

25 வைகாசி 2024 சனி 11:12 | பார்வைகள் : 5859


அமெரிக்காவின் பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் அருகில் நடந்த துப்பாக்கிச் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பார்மொடன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் 24-05-2024 காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 36 வயதுடைய ஆணும் 44 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மற்றொருவர் கையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் அவர் உடனடியாக செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கறுப்பு உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் மொப்பட்டில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

குற்றவாளிகள் இருவரை தேடி பிடிக்கும் பணியை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் அருகில் நடத்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்