அடுத்தடுத்து வெளியாகப்போகும் அஜித் படங்கள்?
25 வைகாசி 2024 சனி 14:12 | பார்வைகள் : 10942
சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரக்கூடிய அஜித் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அடுத்தடுத்தப் படங்களின் தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் ‘விடாமுயற்சி’ படத்திற்கு பிரேக் விட்டு, அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், அடுத்த வருட பொங்கலுக்கு படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் கழித்து ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார் அஜித். ஒரு பக்கம் தனது 'ஏகே மோட்டோ ரைடு’ நிறுவனத்தின் பிசினஸ், பைக் டூர் என வேலைகள் இருந்தாலும், இனி படங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அஜித்.
அதற்காகதான் இந்த ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என அடுத்தடுத்து படங்கள் ஒப்புக் கொண்டதற்கான காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இந்த இரண்டு படங்களை முடித்து விட்டு தனது 64வது படத்திற்கான கதையையும் கேட்டு ஓகே செய்திருக்கிறார் அஜித்.
’தனி ஒருவன்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிவர் மோகன் ராஜா. இவர்தான் அஜித்திற்கு கதை சொல்லி இருக்கிறார். இந்த கதை அஜித்திற்கு பிடித்துப் போக அவரை தனது அடுத்தப் படத்திற்கு ஃபிக்ஸ் செய்து விட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘விவேகம்’ படத்தை இயக்கிய சிறுத்த சிவா இயக்கத்தில் 64வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது இயக்குநர் மோகன் ராஜா பெயர் அடிபடுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan