Paristamil Navigation Paristamil advert login

A104 நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் பலி, 13 பேர் காயம்..!

A104 நெடுஞ்சாலையில் விபத்து - ஒருவர் பலி, 13 பேர் காயம்..!

25 வைகாசி 2024 சனி 17:57 | பார்வைகள் : 6964


இன்று சனிக்கிழமை காலை A104(Seine et Marne) நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

Saint-Thibault des Vignes மற்றும் Villeparisis நகரங்களுக்கிடையே இந்த விபத்து காலை 11.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. ஒரு கனரக வாகனம் உள்ளிட்ட பத்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. 

இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தை அடுத்து நீண்ட நேரம் வீதி போக்குவரத்து தடைப்பட்டது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்