Paristamil Navigation Paristamil advert login

கொல்கத்தா மீது ரூ.2 கோடி பந்தயம் கட்டிய கனேடிய ராப் பாடகர்

கொல்கத்தா மீது ரூ.2 கோடி பந்தயம் கட்டிய கனேடிய ராப் பாடகர்

26 வைகாசி 2024 ஞாயிறு 06:14 | பார்வைகள் : 3404


IPL 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி (KKR) வெல்லும் என கனேடிய ராப் பாடகர் ஒருவர் ரூ.2 கோடி பந்தயம் கட்டியுள்ளார்.

ஐபிஎல் பதினேழாவது சீசனின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கத்தில் நடக்கிறது.

இப்போரில் கோப்பையையும் பெரும் பரிசுத் தொகையையும் பெறும் வெற்றியாளர் யார்? என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆய்வாளர்கள் எதிர்பார்த்து விவாத்து வருகின்றனர்.

இந்நிலையில், கால்பந்து போட்டிகளில் அதிக அளவில் பந்தயம் கட்டும் கனேடிய ராப்பரும், இசையமைப்பாளருமான டிரேக் கிரஹாம் (Drake Graham), இம்முறை ஐபிஎல் வெற்றியாளர் யார் என்று பந்தயம் கட்டியுள்ளார்.

IPL வெற்றியாளர் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) வெற்றி பெறும் என்று டிரேக் ரூ.2 கோடி பந்தயம் கட்டியுள்ளார்.

அவரது கணிப்பு உண்மையாக மாறினால் அவர் ரூ.4 கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

ஆனால், கடந்த காலங்களில், டிரேக் சூதாடி தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்