பப்புவா நியூ கினியா நிலச்சரிவு - 300க்கும் மேற்பட்டோர் பலி
26 வைகாசி 2024 ஞாயிறு 14:18 | பார்வைகள் : 2280
பப்புவா நியூ கினியாவில் நேற்று முன்தினம் பெய்த மழையில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனமழையின் போது கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து, பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து எங்க மாகாணத்தில் உள்ள லகாய்ப் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகமே கூறுகையில்,
இந்த நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கி மேலும் பலரை காணவில்லை என்பதால், மேலும் பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.