ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தீர்கள்?: லாலுவுக்கு நிதீஷ் குமார் கேள்வி
26 வைகாசி 2024 ஞாயிறு 15:45 | பார்வைகள் : 1663
2005ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது. லாலு பிரசாத் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை' என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதீஷ் குமார் பேசியதாவது: நாங்கள் லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுத்தோம். 2020ல் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். 4 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. 2005ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது.
வளர்ச்சி
லாலு பிரசாத் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் ஆட்சியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர பயப்படுவார்கள். அப்போது பெண்கள் எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடந்தன. சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறையிலும் வளர்ச்சியை உருவாக்க நாங்கள் நிறைய வேலை செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.