Paristamil Navigation Paristamil advert login

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet கொழும்பில் மரணம்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean Francois Pactet கொழும்பில் மரணம்.

26 வைகாசி 2024 ஞாயிறு 16:18 | பார்வைகள் : 4270


கடந்த 01/12/ 2022ம் ஆண்டுமுதல் பிரான்ஸ் தேசத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான தூதரக பணியாற்றி வந்த Jean Francois Pactet இன்று கொழும்பில் மரணமடைந்துள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம் அறிவித்துள்ளது. 

சிறந்த பண்பாளரும், சிறந்த ராஜதந்திரியுமான Jean Francois Pactet இலங்கை, மாலைதீவு ஆகிய இரு நாடுகளிலும் தன் பணியை திறம்பட ஆற்றிவந்தார் எனவும், 
இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் பிரான்சுக்குமான உறவை மிகச்சிறப்பான முறையில் கையாண்டு வந்தார் எனவும் பிரான்சின் வெளிவிவகார அமைச்சு  தெரிவித்துள்ளது.

1970ல் பிறந்த Jean Francois Pactet
இலங்கை தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர்  வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவிற்கான பிரெஞ்சு தூதரகத்திலும் (2012-2016) பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோவுக்கான பிரெஞ்சு நிரந்தர பிரதிநிதித்துவத்திலும், . வெளியுறவு அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவர் இதூதுவராக இருந்த காலத்தில் தான் ஒரு பிரான்ஸ் அரசுத்தலைவர் இலங்கைக்கும் முதல் தடவையாக பயணம் செய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவரின் சாவு மாரடைப்பால் ஏற்பட்டதென இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகம்  தெரிவித்துள்ளது.

 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்