■ ஆசிரியருக்கு கத்திக்குத்து! - மாணவன் கைது..

27 வைகாசி 2024 திங்கள் 16:02 | பார்வைகள் : 6924
இன்று மே 27, திங்கட்கிழமை காலை மேற்கு பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவர், ஆசிரியர் ஒருவரைக் கத்தியாக் குத்தியுள்ளார்.
Chemillé-en-Anjou (Maine-et-Loire) நகரில் உள்ள Hyrôme எனும் உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலை 9.45 மணி அளவில் மாணவன் ஒருவன், ஆசிரியரை கத்தியால் தாக்கியுள்ளார். அவருக்கு முகத்தில் காயமேற்பட்டுள்ளது.
உடனடியாக ஜொந்தாமினர் அழைக்கப்பட்டனர். வகுப்பறையின் ஜன்னலுக்கால் உள் நுழைந்த ஜொந்தாமினர், குறித்த மாணவனை மடக்கிப் பிடித்தனர்.
ஆசிரியர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதல் மேற்கொண்ட மாணவனது நோக்கம் குறித்து அறிய முடியவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.