சுவிட்சர்லாந்துக்கு குடிப்பெயர காத்திருக்கும் அகதிகளுக்கு இடமில்லை

27 வைகாசி 2024 திங்கள் 16:13 | பார்வைகள் : 7360
சுவிட்சர்லாந்துக்கு இந்த ஆண்டில் வரவிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவிஸ் நீதித்துறை அமைச்சரான Beat Jans தெரிவித்துள்ளார். ஆகவே, சுவிஸ் அரசு கூடுதலாக 3,000 பேருக்கு தங்க இடம் ஏற்பாடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், 2,400 அகதிகள் தங்குவதற்கு இடமில்லை என சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. ஆகவே, அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய, அதிகாரிகள் ராணுவத்தையும், மாகாண அதிகாரிகளையும் தொடர்புகொண்டுவருகிறார்கள்.
அத்துடன், அதற்கு பணமும் தேவைப்படுகிறது. ஆகவே, நாடாளுமன்றம் புகலிடக்கோரிக்கையாளர்களைத் தங்கவைப்பதற்கான கட்டிடங்களுக்கான நிதி உதவிக்கு ஒப்புதலளிக்கும் என தான் நம்புவதாக நீதித்துறை அமைச்சரான Beat Jans தெரிவித்துள்ளார்.
அப்படி கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லையென்றால், புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைப்பது சாத்தியமில்லை. அதனால், கூடுதல் புகலிடக்கோரிக்கையாளர்களை மாகாணங்களுக்கு நாடுகடத்தவேண்டிய நிலை ஏற்படலாம்.
அதனால் மேலும் பிரச்சினைகள் அதிகமாகத்தான் செய்யுமேயொழிய, பிரச்சினைகள் குறைய வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025