கனடாவில் புதிதாக திறக்கப்பட்ட தங்கச் சுரங்கம்

27 வைகாசி 2024 திங்கள் 16:18 | பார்வைகள் : 5979
கனடாவின் ஒன்ராறியோவில் புதிய தங்கச் சுரங்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அது கனடாவின் மிகப்பெரிய சுரங்கம் என்னும் பெருமையைப் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒன்ராறியோவின் Timmins மற்றும் Sudbury நகரங்களுக்கிடையே இந்த புதிய தங்கச் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று என்னவென்றால், இந்தச் சுரங்கத்தில் தானியங்கி ட்ரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டம் எதிர்பார்த்த விளைவைக் கொடுக்கும் நிலையில், இந்தச் சுரங்கம் கனடாவின் மிகப்பெரிய சுரங்கம் என்ற பெருமையை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு விடயம், இது தங்கச் சுரங்கமானாலும், சுரங்கத்தில் தங்கத் தாதுவை வெட்டி எடுக்கும்போது, அதனுடன் வெள்ளித்தாதுவும் கிடைக்கும் என்பதால், தங்கமும் வெள்ளியும் இந்தச் சுரங்கத்திலிருந்து கிடைக்கும். ஆகவே, இதை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றும் கூறலாம்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025