Rafah தாக்குதலில் 45 பேர் பலி.. பரிசில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
28 வைகாசி 2024 செவ்வாய் 04:35 | பார்வைகள் : 2916
Rafah பகுதியில் உள்ள அகதிமுகாம் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 45* பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை கண்டித்து நேற்று திங்கட்கிழமை மாலை பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான பல ஆயிரக்கணக்கான மக்கள், பாலஸ்தீன கொடிகளையும், பதாகைகளையும் சுமந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யஹு ஆகியவர்களின் படத்தை அச்சிட்டு, 'மனித நேயத்தை தான் அவர்கள் படுகொலை செய்கிறார்கள்" என எழுதப்பட்டு மிகப்பெரிய பதாகை ஒன்றை அவர்கள் வைத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பரிசில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.