ஒலிம்பிக் : சென் நதியை சுத்திகரிக்க €1.4 பில்லியன் யூரோக்கள் செலவு..!!
28 வைகாசி 2024 செவ்வாய் 06:36 | பார்வைகள் : 2989
ஒலிம்பிக் போட்டிகளின் போது சென் நதியில் நீச்சல் தடாகங்கள் அமைக்க அரசு உறுதியளித்துள்ளது. ஆனால் அது அத்தனை எளிதான நடவடிக்கை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
சென் நதியில் நீந்துவதற்கு1923 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான பக்டீரியா தண்ணீரில் இருப்பதால், இந்த நீச்சல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென் நதியில் நீச்சல் தடாகம் அமைக்கப்படுவது தொடர்பில் உறுதியாக இருக்கிறது. ‘சென் நதியில் நீந்துவேன்!’ என ஜனாதிபதி மக்ரோனும், பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென் நதியினை சுத்திகரிக்க €1.4 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை இலக்குவைத்து இந்த நீச்சல் தடாகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்றபோதிலும், அங்கு நிரந்தரமாக நீச்சல் தடாகங்களும், கடற்கரை போன்ற பகுதியும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.