இஸ்ரேல் தாக்குதல்.. சுற்றுவட்ட வீதியில் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!
29 வைகாசி 2024 புதன் 05:18 | பார்வைகள் : 5104
நேற்று மே 28 ஆம் திகதி, Place de la République பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. Rafah பகுதியில் உள்ள அகதிகள் குடியேறியுள்ள பகுதியில் இஸ்ரேலிய வான்படையினர் தாக்குதல் மேற்கொண்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கிட்டத்தட்ட 4,500 பேர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக திங்கட்கிழமை இரவு இடமெபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10,000 பேர் பங்கேற்றிருந்தனர்.
Place de la République பகுதியில் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், அவர்கள் சுற்றுவட்ட வீதி (périphérique) இல் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீதி போக்குவரத்தையும் முடக்கினர். காவல்துறையினர் அழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர். நீண்ட நேரம் வீதி போக்குவரத்து முடக்கப்பட்டது.
சிலர் இஸ்ரேலிய தூதரகத்துக்குள் நுழைய முற்பட்டனர். அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
காஸாவின் Rafah பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மூன்று நாட்களுக்கு முன்னர் தாக்குதல் மேற்கொண்டது. அதில் 45 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.